நெய்வேலி மந்தாரக்குப்பம் கடைவீதியில் இருந்து பழைய நெய்வேலி செல்லும் சாலையில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகள் சாலையில் நடந்து செல்பவர்களை கடிக்க விரட்டுகின்றன. குறிப்பாக இரவு நேரத்தில் பொதுமக்கள் சாலையில் நடக்கவே பெரும் அச்சமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.