நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு கலைக்கல்லூரி திருச்சி சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகள் ரமேஷ் தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ்சில் ஏறுகிறார்கள். இந்த பஸ் நிறுத்தத்தில் ஒரு புறத்தில் மட்டுமே நிழற்கூடம் உள்ளது. மற்றொரு புறத்தில் நிழற்கூடம் இல்லை. எனவே மாணவிகள் வெயிலில் காத்திருந்து பஸ்சில் ஏறி செல்லும் நிலை இருந்து வருகிறது. இந்த நிலையை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றொரு புறத்திலும் நிழற்கூடம் அமைத்தால் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.