ஈரோடு வேலப்பகவுண்டன் வலசு வடிவேல் நகர் பகுதியில் மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருந்தது. மின்கம்பம் கீழே விழுந்தால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாய்ந்த மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான செய்தி ‘தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள், வடிவேல் நகர் பகுதிக்கு சென்று அங்கு சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பத்தை சரி செய்தனர். செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.