ராமநாதபுரம் நகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவிற்கு என்று தனி எக்ஸ்ரே மையம் இல்லை. இதனால் கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் குழந்தையுடன் வரும் தாய்மார்கள் அவதியடைகின்றனர். மேலும் இவர்கள் பழைய வெளிநோயாளிகள் பிரிவில் உள்ள எக்ஸ்ரே மையத்துக்கு செல்ல வேண்டி நிலை உள்ளது. எனவே கர்ப்பிணிகள், குழந்தைகள் நலன் கருதி மேற்கண்ட பிரிவிற்கென தனி எக்ஸ்ரே மையம் அமைக்க வேண்டும்.