திருப்பூர் மாநகர பகுதியான 4-வது வார்டு விக்னேஷ்வரா நகர் தெருக்களில் புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் விஷ சந்துகள் நடமாட்டம் அதிகரித்து பொதுமக்களை அச்சுறுத்துகிறது. எனவே சாலையோர புதர்களை உடனே அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.