சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா கல்லூரி சாலையில் விபத்து அதிகளவில் ஏற்படுகிறது. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக இச்சாலை உள்ளது. நாள்தோறும் ஏராளமான வாகனஓட்டிகள் இச்சாலை வழியாக பயணிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் நலன் கருதி மேற்கண்ட சாலையில் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.