செங்கல்பட்டு மாவட்டம், வடபெரும்பாக்கம் வி.சி.என்.சாலையில் மின் இணைப்பு பெட்டி ஒன்று உள்ளது. இந்த மின் இணைப்பு பெட்டி தரையில் வைத்தால் ஆபத்து என்பதால், சிமெண்ட் தளம் போடப்பட்டு உயர்த்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சிமெண்ட் தளம் உடைந்து மின்சார பெட்டி கீழே விழும் நிலையில் உள்ளது. ஏராளமான பொதுமக்கள் இந்த இடத்தில் வசிப்பதால், மின் விபத்து ஏற்படும் முன் மின்வாரிய துறை அதிகாரிகள் சிமெண்ட் தரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.