சிவகங்கை நகர் வாணியங்குடி ஊராட்சியை சேர்ந்த அண்ணாநகரில் சில நாட்களுக்கு முன்பு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. இந்த வடிகால் தரையை விட சற்று உயரமாக இருப்பதால் மழை காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. எனவே வடிகாலை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.