செங்கல்பட்டு மாவட்டம், பழையபெருங்களத்தூர், சமத்துவபுர சாலையில் உள்ள மாங்கவுரி குளம் தூர்வாரப்படமால் கிடந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குளத்தை சீரமைத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.