விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2025-03-02 11:11 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை, தோப்பு தெரு பகுதியில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி உள்ளது. பள்ளிக்கு தினமும் ஏராளமான மாணவர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கூடம் அமைந்துள்ள தோப்பு தெருவில் அதிவேகமாக வாகனங்கள் செல்கிறது. இதனால் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

அபாய கிணறு