திருவள்ளூர் மாவட்டம் கீழ்நல்லாத்தூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் இருசக்கர வாகனங்கள் வேகமாக செல்கின்றன. மேலும், அவ்வப்போது சிறுசிறு விபத்துகள் நிகழ்கின்றன. எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைத்து தர கிராம நிர்வாகம் நடைவடிக்கை எடுக்க வேண்டும்.