அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்தில் உள்ள விக்கிரமங்கலம் இப்பகுதிகளுக்கு முக்கிய ஊராகத் திகழ்ந்து வருகிறது. இப்பகுதிகளில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் அரியலூர் இல்லையென்றால் ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனம் வர வேண்டி உள்ளது. இதனால் தீ விபத்துக்களை சரியாக தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.