அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தாலுகா அலுவலக வளாகப் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை விரட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.