செஞ்சி கோட்டையில் தமிழகம் மட்டுமின்றி வௌி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்களின் பாதுகாப்புக்காக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இது திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டுள்ளது. இதனால் குற்ற சம்பவங்கள் அப்பகுதியில் நிகழ வாய்ப்புள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் நலன்கருதி புறக்காவல் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.