தாரமங்கலம் நகராட்சி அண்ணா சிலை அருகே சந்தைப்பேட்டை உள்ளது. இது மக்கள் அதிகளவில் வந்து செல்லும் இடம். ஆனால் இங்கு சுகாதார வளாகம் இல்லை. சந்தைப்பேட்டை என்பதால் சந்தை கூடும் நாட்கள், பண்டிகை நாட்களில் சுகாதார வளாகம் இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுகாதார வளாகம் கட்டினால் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.