கிணற்றுக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

Update: 2025-02-23 17:04 GMT

தாரமங்கலம் நகராட்சிக்குட்பட்ட தேர்நிலையம் 13-வது வார்டில் முத்துமுனியப்பன் கோவில் தெரு உள்ளது. இந்த தெரு பகுதியில் சாலையையொட்டி பொது கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் அபாயகரமாக உள்ளது. எனவே சாலையில் செல்லும் குழந்தைகள், வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி வருகிறது. இதன் காரணமாக கிணற்றுக்கு சுற்றுச்சுவர் அல்லது கம்பி வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்