சிவகங்கை நகர் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ-மாணவிகள் சாலையை கடக்க மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் சிலர் சாலை விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு தலைகவசம் அணியாமலும், அதிக நபர்களுடனும் பயணம் செய்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.