பஸ் வசதி வேண்டும்

Update: 2025-02-23 14:47 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், கொளப்பாக்கம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் போதிய பஸ் வசதி இல்லாததால் மிகவும் அவதி அடைகின்றனர். குறிப்பாக, வயதானோர் அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. இந்த பகுதியில் மினிபஸ் வசதியாவது ஏற்படுத்திதர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்