பொதுமக்கள் அவதி

Update: 2025-02-23 14:45 GMT

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு தினமும் ஏரானமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால், அங்கிருந்து கிளாம்பாக்கம் செல்வதற்கு பஸ் ஏறும் பகுதியில் நிழற்குடை இல்லாமல் உள்ளது. இதனால் கடும் வெயிலில் பொதுமக்கள் சாலையில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். இதன்காரணமாக, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் அவதி அடைகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் வண்டலூரில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல பஸ் நிறுத்தம் அமைக்க நடவடக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்