சென்னை கொளத்தூர் பகுதியில் இ-சேவை மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையம் கடந்த சில நாட்களாக திறக்கப்படாததால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், இ-சேவை மையம் திறக்கும் நேரம், கிழமை, விடுமுறை நாட்கள் ஆகிய தகவல்கள் அங்குள்ள தகவல் பலகையில் குறிப்பிடவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி மையத்தை உடனே திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.