சென்னை அடையாறு, கஸ்தூரிபாய் நகர் 5-வது மெயின் ரோட்டில் ஏராளமாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவிற்கு பெயர் பலகை இல்லை. மேலும், இந்த தெரு முட்டு சந்து என்பதனால் தினமும் வழி தெரியாமல் ஏராளமானேர் அவதிப்படுகிறார்கள். மேலும் புதிதாக வரும் நபர்கள் வழி தெரியாமல் சுற்றி திரியும் நிலை ஏற்படுகிறது. தபால்காரர்களும் தினறுகின்றனர்.எனவே உடனடியாக மாநகராட்சி அதிகாரி நடவடிக்கை எடுத்து,தெருவின் பெயர் பலகை வைக்கவேண்டும்.