அசுத்தமான கழிவறை

Update: 2025-02-23 14:36 GMT

சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறைகள் மோசமான நிலையில் நோயாளிகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது என புகார்கள் எழுந்துள்ளது. அந்த வகையில், ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கண் அழுத்த பரிசோதனை மையம் அருகே உள்ள கழிவறையில் தண்ணீர் வராமல் உள்ளது. மேலும், பயங்கர துர்நாற்றம் வீசுவதால் நோயாளிகள் கடும் அவதி அடைகின்றனர். எனவே ஆஸ்பத்திரி நிர்வாகம் கழிவறையை தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்