சென்னை அண்ணாநகர் மேற்கு பஸ் பணிமனையில் இருந்து கோயம்பேடு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். மேலும், வாகனங்கள் அதிகளவில் இந்த சாலையில் செல்வதால் வாகன நெரிசல் ஏற்பட்டு அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது. இதனால் வாகனத்தில் பயணிக்கும் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் பள்ளத்தில் கீழே விழுந்து காயம் ஏற்பட்டுகிறது.இதுமட்டுமின்றி இந்த சாலையில் மெட்ரோ பணி நடைபெற்று வருவதால் இன்னும் மிகுந்த அதிகளவில் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது. எனவே சாலையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.