அரியலூர் ரெயில் நிலையம் அருகே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ்பகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. மேலும் மழைநேரங்களில் பெய்த மழைநீர் வடிய வழியில்லாமல் அங்கேயே தேங்கி நிற்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்றும் பரவும் அபாயம் அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.