கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கழிவறைகள் சரியான முறையில் தூய்மை படுத்தாமல் உள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.