அரியலூர் புறவழிச்சாலையில் உள்ள ரிதன்யா மண்டபம் அருகே தெருநாய்கள் அதிகளவில் சுற்றி வருகின்றன. இந்த தெருநாய்கள் சாலையில் வாகனங்கள் செல்லும்போது குறுக்கே பாய்ந்து ஓடுகின்றன. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் முறையாக மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் சாலைகளில் தெருநாய்கள் மற்றும் மாடுகள் திரிந்தாலும் தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.