கொடைக்கானல் பஸ் நிலையத்தில் ஏராளமான நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை பஸ் நிலையத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்துவதுபோல் பின்தொடர்ந்து செல்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைகின்றனர். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.