கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு

Update: 2025-02-16 16:50 GMT

தேனி புதிய பஸ் நிலைய வளாகத்தில் பதிக்கப்பட்ட கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி நடைமேடையில் தேங்கி நிற்கிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் முகம் சுழித்தபடியே காத்திருக்கும் நிலை உள்ளது. மேலும் கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே பஸ் நிலையத்தில் கழிவுநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்