கள்ளக்குறிச்சி நகர பகுதிகளில் சாலையோரத்தில் அதிக அளவில் துரித உணவு கடைகள் உள்ளன. இதில் தயாரிக்கப்படும் உணவுகளில் சுவைக்காக விதிமுறைகளை மீறி ரசாயனப்பொடிகள் அதிக அளவில் கலக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே மக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படும் முன் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.