மூங்கில்துறைப்பட்டு அருகே பொரசப்பட்டில் உள்ள ஏரியில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இவைகளுக்கு உணவாக ஆலை கழிவுகள் கொட்டப்படுவதால் ஏரி தண்ணீர் மாசடைவது மட்டுமின்றி, நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படுகிறது. கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் ஏரியை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.