நோய் பரவும் அபாயம்

Update: 2025-02-16 14:15 GMT
திருச்சி மாவட்டம், துறையூர் 14-வார்டு திருச்சி சாலையில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்குள்ள சாக்கடையில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. மேலும் கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடும் துர்நாற்றமும் வீசி வருகிறது. எனவே சம்ந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்