அரியலூர்-செந்துறை சாலையானது நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாக உள்ளது. பல்வேறு ஊர்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் என தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது. இதற்காக சமீபத்தில் நெடுஞ்சாலைத்துறையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதில், ஆக்கிரமிப்புகளுடன் சேர்த்து சாலையோரம் இருந்த மரங்களையும் வேருடன் பிடுங்கி அகற்றி விட்டனர். சாலையை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த மரங்கள் அகற்றப்பட்டிருந்தாலும், அவற்றை வேறு இடத்தில் நட்டு வைத்தால் சுற்றுச்சூழல் மேம்படும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து, வெட்டிய மரங்களுக்கு பதிலாக 3 மடங்கு கூடுதலான மரங்களை வேறு இடத்தில் நட வேண்டும்.