அரியலூர் நெருஞ்சிக்கோரை கிராமத்தில் ஈஸ்வரன் கோவில் ஏரி கரையை சுற்றி குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.