செங்கல்பட்டு மாவட்டம், புது பெருங்களத்தூரில் உள்ள சேகர் திருமண மண்டபத்திற்கு எதிரே மாநகராட்சி தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த கட்டிடம் பராமரிக்கப்படாமல் மோசமான நிலையில் உள்ளது. மேலும், பள்ளி முடிந்ததும் நுழைவு வாயில் மூடாமல் இருப்பதால், மாடுகளின் தங்குமிடமாக பள்ளி மாறியுள்ளது. இதனால் பள்ளி குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதேபோல, பள்ளிக்கு எதிரே திருமண மண்டபம் உள்ளதால், மண்டபத்திற்கு வருகிறவர்களது வாகன நிறுத்தும் இடமாகவும் பள்ளி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.