செங்கல்பட்டு மாவட்டம், பழவேலி பகுதியில் மயானம் ஒன்று உள்ளது. இந்த மயானத்தில் அந்த பகுதியில் உயிரிழந்த மக்களின் உடல் தகனம் செய்யப்படுகிறது. தற்போது இந்த மயானம் பராமரிக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், அந்த பகுதி மக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எரியூட்டு மயானமாக உள்ள இந்த சுடுகாட்டை மின் மயானமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.