திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் சோத்துபெரும்பேடு கிராமத்தில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் திறந்த வெளியில் செல்கிறது. இதனால் பள்ளி குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. இப்பகுதியில் பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் பெரிதும் உடல்நல குறைவு ஏற்படுகிறது. எனவே ஊராட்சி அதிகாரிகள் கழிவுநீரை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.