சென்னையை அடுத்த மூலக்கடை- சர்மாநகர் வழித்தடத்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். ஆனால் இந்த வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. ஷேர் ஆட்டோக்கள் மட்டுமே செல்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பெண்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்துத்துறை இந்த வழித்தடத்தில் பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.