தேவர்சோலையில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் சர்க்கார்மூலா பகுதியில் புதர்களுக்கு இடையே இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டி செல்கின்றனர். இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன், இறைச்சி கழிவுகளை தின்பதற்காக சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் ஊருக்குள் வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இறைச்சி கழிவுகளை திறந்தவெளியில் கொட்டி செல்பவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.