சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் கடற்கரை சாலையில் நின்றபடி கடல் அலைகளை பார்த்து ரசிப்பதற்காக தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்புச்சுவர்கள் சேதமடைந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால், தொட்டால் விழும் நிலையில் இருப்பதால் இதை அறியாத சுற்றுலா பயணிகள் அங்கு செல்லும் போது விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் நலன்கருதி தடுப்புச்சுவர்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரெக்ஸ், மேல பெருவிளை, நாகர்கோவில்.