தெருநாய்கள் தொல்லை

Update: 2025-02-09 16:29 GMT
  • whatsapp icon

 ஈரோடு அரசு ஆஸ்பத்திரி பிரப் ரோடு சந்திப்பு, காசிபாளையம் பிரிவு, ஜான்சி நகர் 2-வது வீதி உள்பட ஈரோட்டின் பல பகுதிகளில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இவற்றின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வழியாக வாகனங்களில், நடந்து செல்பவர்களை கடிக்க துரத்தி வருகின்றன. இரவு நேரங்களில் பணி முடித்து வாகனங்களில் செல்பவர்களையும் விட்டு் வைப்பதில்லை. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்