தாரமங்கலத்தில் இருந்து ஜலகண்டாபுரம் செல்லும் மெயின் ரோட்டில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் நுழைவுவாயிலில் பெயர் பலகை இல்லை. இதனால் புதிதாக பள்ளிக்கு வரும் மாணவிகள் மற்றும் பெற்றோர் பள்ளி இருப்பது தெரியாமல் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் பள்ளி வளாகத்தில் மின்விளக்குகள் இல்லை. எனவே அரசு பள்ளிக்கு பெயர் பலகை அமைத்து, மின் விளக்குகள் பொருத்தி தர நடவடிக்கை எடுக்கப்படுமா?.