குரங்குகள் அட்டகாசம்

Update: 2025-02-09 15:03 GMT

வெண்ணந்தூர் அருகே உள்ள வெள்ளைப்பிள்ளையார் கோவில், அத்தனூர், அளவாய்ப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. வீடுகளிலும், கடைகளிலும் உணவுப்பொருட்களை தூக்கி செல்கின்றன. மேலும் தின்பண்டங்களுக்காக குழந்தைகளை கடிக்க செல்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள். குழந்தைகள், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டுவைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-விஜய், வெண்ணந்தூர்.

மேலும் செய்திகள்