சாக்கடை கால்வாய் பணியால் அபாயம்

Update: 2025-02-09 14:35 GMT

நல்லம்பள்ளி தாலுகா பாளையம்புதூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்காக குழிகள் தோண்டப்பட்டது. ஆனால் கால்வாய் பணி தொடங்காமல் அப்படியே உள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கால்வாய் பணியை விரைந்து தொடங்கவும், விபத்துகளை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலா, பாளையம்புதூர்.

மேலும் செய்திகள்