சின்னசேலம் அருகே அண்ணா நகாில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் கழிவுநீர் சுத்தம் செய்யும் வாகனம் நிறுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனத்தில் இருந்து கசிந்து வெளியேறும் கழிவுநீர் அங்கேயே தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் பஸ் ஏற வரும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.