செஞ்சி காந்தி கடை வீதியில் சில வியாபாரிகள் நடைபாதையையும், சாலையையும் ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க கடை வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.