விழுப்புரம் புதிய பஸ்நிலையம் அருகே மாடுகள் அதிகளவில் சாலையில் சுற்றித்திரிகின்றன. மேலும் இவை சாலையிலேயே படுத்து கிடப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.