புவனகிரி அருகே அம்மன்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் கால்கடுக்க காத்திருந்து பஸ் ஏறிச்செல்லும் அவல நிலை உள்ளது. இதை தவிர்க்க அங்கு விரைந்து பயணிகள் நிழற்குடை அமைத்துத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.