காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு பட்டூர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அதிக அளவு தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. தெருவில் சுற்றும் நாய்கள் சாலையில் செல்லும் குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.