நெடுஞ்சாலை ஓரத்தில் மரம் வேண்டும்

Update: 2025-02-09 14:16 GMT

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டையிலிருந்து தாம்பரம் வழியாக பெருங்களத்தூர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை அதிக அகலம் கொண்டது. இந்த சாலை எப்போதுமே பரபரப்பாக காணப்படும். சென்னையில் இருந்து தென்மாவட்டம் செல்லும் பயணிகள் அனைவரும் இந்த வழியாக செல்கின்றனர். ஆனால், சாலை ஓரங்களில் மரங்களே இல்லை. இதனால் வெகு தூரம் பயணம் செய்யும் பயணிகள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நெடுஞ்சாலை ஓரத்தில் மரம் நட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்