பராமரிக்கப்படாத ரெயில்வே கேட்

Update: 2025-02-09 14:15 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் மற்றும் பொத்தேரி ரெயில்வே தண்டவாளம் பகுதியில் பொதுமக்கள் கடந்து செல்ல இருக்கும் ரெயில்வே கேட் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். ரெயில் வருவது தெரியாமல் சிலர் கடந்து செல்வதால் விபத்து ஏற்படுகிறது. இதேபோல, இந்த பகுதியை கடந்து செல்லும்போது ரெயில் டிரைவர் மெதுவாக ரெயிலை இயக்க வேண்டிய சூழ்நிலையும் உள்ளது. எனவே, ரெயில்வே நிர்வாகம் ரெயில்வே கேட்டை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்